இதுதான் "பராசக்தி" படத்தின் கதையா?.. இணையத்தில் பரவும் தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
இதுதான் "பராசக்தி" படத்தின் கதையா?.. இணையத்தில் பரவும் தகவல்!
Published on

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில் 'பராசக்தி' படத்தின் கதை இதுதான் என்று கூறும் ஒரு கதை சமூக வலைதளத்தில் உலா வருகிறது. அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராசில் நடைபெற்ற ஒரு உரிமை மறுப்பு போராட்டத்தில், கிளர்ச்சியாளர்களை ஒழிக்க ஒரு அதிகாரி வருகிறார். ஆனால் அவரது சகோதரர் தான் போராட்டத்துக்கு மூலகாரணமாக இருக்கிறார். இறுதியில் பாசமா? நீதியா? என்ற சூழலில் நாயகன் எடுக்கும் முடிவு தான் 'பராசக்தி' படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com