'ஜனநாயகன்' படம் வெளியாவதில் சிக்கல்.. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி!

இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'ஜனநாயகன்' படம் வெளியாவதில் சிக்கல்.. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி!
Published on

சென்னை,

"சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை" போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் யை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் முதல்நாள் காட்சிக்கான முன்பதிவு தொடங்காமல் இருக்கும் நிலையில், மற்ற மாவட்டங்களில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com