''வார் 2'' - கவனத்தை ஈர்த்த கியாரா அத்வானியின் புதிய போஸ்டர்

இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியாக உள்ளது.;

Update:2025-06-27 07:41 IST

சென்னை,

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்பை ஆக்சன் திரில்லர் படங்களில் ஒன்றான ''வார் 2'', ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியாக உள்ளது.

ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ள இந்த படம், வெளியாக இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில், படக்குழு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

இதில், கியாரா அத்வானியின் போஸ்டர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்