"3 ரோஸஸ் சீசன் 2" - ’லைப் இஸ் எ கேம்’ பாடல் வெளியீடு

கிரண் கே கரவல்லா இந்த வெப் தொடரை இயக்கி இருக்கிறார்.
'LifeisAGame' song from 3Roses season 2 is out now
Published on

சென்னை,

ஈஷா ரெப்பா, பாயல் ராஜ்புட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த வெப் தொடர் "3 ரோஸஸ்", ஆஹா ஓடிடி தளத்தில் இது சூப்பர்ஹிட்டானது. இப்போது, இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகி இருக்கிறது.

இதில் ஈஷா ரெப்பா, குஷிதா கல்லாபு மற்றும் ராஷி சிங் ஆகியோர் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த தொடரின் டீசர் வெளியானது.

இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ரவி நம்பூரி மற்றும் சந்தீப் பொல்லா எழுதியுள்ளனர், கிரண் கே கரவல்லா இந்த தொடரை இயக்கி இருக்கிறார். 3 ரோஸஸ் சீசன் 2 டிசம்பர் 12 முதல் ஆஹா ஓடிடியில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் லைப் இஸ் எ கேம் என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை லிப்சிகா பாஷ்யம் பாடியுள்ளார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com