''வார் 2'' படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் திரை நேரம் எவ்வளவு?

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்;

Update:2025-07-20 19:21 IST

சென்னை,

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடித்திருக்கும் ஆக்சன் திரைப்படம் வார் 2. அயன் முகர்ஜி இயக்கி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 14 அன்று பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

இந்தப் படம் பிளாக்பஸ்டர் படமான வாரின் தொடர்ச்சியாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. ஜூனியர் என்.டி.ஆரின் முதல் நேரடி பாலிவுட் படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் அவரது திரை நேரம் எவ்வளவு என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, படத்தில் 35 நிமிட காட்சிகளை தவிர, படம் முழுவதும் ஜூனியர் என்.டி.ஆர் காணப்படுவார் என்று கூறப்படுகிறது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்