''நெல்சன் ஸ்டைலில் படம் எடுக்க வேண்டும்'' - ''ஓஜி'' பட இயக்குனர்

ஆக்சன் படமான ''ஓஜி'' மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், 'நகைச்சுவை படங்களை' எடுக்க விரும்புவதாக சுஜீத் கூறினார்.;

Update:2025-09-28 13:24 IST

சென்னை,

''ரன் ராஜா ரன்'' (2014) போன்ற நகைச்சுவைப் படத்துடன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய சுஜீத், அடுத்த இரண்டு படங்களான ''சாஹோ'' மற்றும் சமீபத்தில் வெளியான''தே கால் ஹிம் ஓஜி'' மூலம் ஆக்சன் பக்கம் திரும்பினார்.

பாக்ஸ் ஆபீஸில் ''ஓஜி'' மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், சுஜீத் சமீபத்திய ஒரு நேர்காணலில் 'நகைச்சுவை படங்களை' எடுக்க விரும்புவதாக கூறினார்.

அவர் கூறுகையில், "ஓஜி மற்றும் சாஹோ இரண்டும் ஆக்சன் படங்கள். இருப்பினும், எனது அடுத்த படத்தில் நகைச்சுவை கூறுகள் இருக்கும். நான் நெல்சன் படங்களைப் பார்த்திருக்கிறேன், அந்த ஸ்டைலில் படங்களை இன்னும் அதிகமாக எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்