'ஓஜி' படத்தில் பவன் கல்யாணின் மகளாக நடித்த சிறுமி யார் தெரியுமா?
இந்தப் படத்தில் பவன் மற்றும் பிரியங்காவின் மகளாக சாயிஷா நடித்தார்.;
ஐதராபாத்,
பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ''தே கால் ஹிம் ஒஜி'' மூவி'. இதில், பவன் ஒரு கேங்ஸ்டராக மட்டுமல்லாமல், தந்தையாகவும் நடித்தார். சுஜித் இயக்கிய இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்தார். சாயிஷா இந்தப் படத்தில் பவன் மற்றும் பிரியங்காவின் மகளாக நடித்தார்.
மும்பையைச் சேர்ந்த சாயிஷா இதுவரை பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்தி படமான லாக்அவுட்டில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அது நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்போது அவர் வெள்ளித்திரையில் ''ஓஜி'' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், சாயிஷா படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதனுடன் படக்குழுவுக்கு நன்றியும் தெரிவித்தார். பிரியங்காவுடன் விளையாடுவதை மிஸ் செய்வதாகவும் பிரகாஷ் ராஜுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார். தனக்கு சாக்லேட்டுகள் கொடுத்த அர்ஜுன் தாஸுக்கும் இவ்வளவு நல்ல வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குனர் சுஜித்துக்கும், பவன் உள்ளிட்ட ஓஜி குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.