நாம் யார் என்பதை அடுத்தவர் தீர்மானிக்கக்கூடாது- ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-08-20 07:18 IST

மும்பை,

'உலக அழகி' பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய், தனது நடிப்பால் பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் அமிதாப்பச்சன் மகனும், முன்னணி பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளார்.

இந்தநிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் போஸ்ட்டுகள்  ‘லைக்’ மற்றும் கருத்துகளுக்கு அப்பாற்பட்டது  தனிப்பட்ட சக்தி. நமக்குள் இருந்துதான் அந்த சக்தி வர வேண்டும். இதை நான் ஒரு பெற்றோராக சொல்கிறேன். சமூக ஊடகங்களுக்கும், சமூக அழுத்தத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

சமூக வலைதளங்களில் தற்போது வெளியிடும் செய்திகள், புகைப்படங்கள், கருத்துக்களுக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுத்து விட்டோம். ஆனால் அதில் வரும் செய்திகள் பயனுள்ள செய்திகளாக இல்லை,சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது சோசியல் மீடியா செய்திகள். நாம் யார் என்பதை அடுத்தவர் தீர்மானிக்கக் கூடாது இதை நான் ஒரு பெண்ணாகவும், தாயாகவும் சொல்கிறேன்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்