’தி ராஜா சாப்’ படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை...கண்ணீர் விட்ட நடிகை...வைரலாகும் வீடியோ

மாருதி இயக்கிய இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.;

Update:2026-01-11 02:25 IST

சென்னை,

பிரபாஸின் பான் இந்தியா திரைப்படமான ராஜா சாப் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. பிரபாஸ் தனது விண்டேஜ் லுக்கில் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். மாருதி இயக்கிய இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை பாயல் ராஜ்புத் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ரீல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘தி ராஜா சாப்’ படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருப்பது போல அவர் நடித்துள்ளார்.

குறிப்பாக, கண்ணீர் விடுவது போல் நடித்த அந்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன. இந்த ரீல் வீடியோ வெளியானதிலிருந்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்