“ரோஜா மல்லி கனகாம்பரம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கே.பி.ஜெகன் இயக்கி நடித்த ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
“ரோஜா மல்லி கனகாம்பரம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

கோலிவுட்டில் புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். இப்படங்களை இயக்கியதோடு, மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உள்பட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கே.பி.ஜெகன் தற்போது ரோஜா மல்லி கனகாம்பரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குவதுடன் இப்படத்தில் நாயகனாகவும் அவர் நடிக்கிறார். இப்படத்தை 'யுனைடெட் ஆர்ட்ஸ்', எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் டீஸர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com