அனஸ்வராவின் ’சாம்பியன்’...புதிய பாடல் புரோமோ வெளியீடு

இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது.
Sallangundaale Song Promo Out Now
Published on

சென்னை,

மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமா தற்போது ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடிப்பில் சாம்பியன் என்ற படத்தைத் தயாரித்து வருகிறது.

இதில் , கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் சந்திரகலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து கிரா கிரா ஜிங்கிராகிரே பாடல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாடலான 'சல்லங்குண்டாலே'-வின் புரோமோ வெளியாகி இருக்கிறது. முழு பாடல் நாளை வெளியாகிறது. தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கும் இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com