ஆக்சனில் கலக்கிய சமந்தா...கவனம் ஈர்க்கும் ’மா இன்டி பங்காரம்’ பட டீசர் டிரெய்லர்
இந்த படத்தில் மூத்த நடிகை கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.;
சென்னை,
நட்சத்திர நடிகை சமந்தா கடைசியாக சுபம் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமாகும்.
இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் 'மா இன்டி பங்காரம்'. கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.
நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா, குல்ஷன் தேவையா மூத்த நடிகை கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் டிரெய்லரில் சமந்தா ஆக்சனில் கலக்கி இருக்கிறார். இது தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.