’அகண்டா 2’- ல் எனது வேடம்...பகிர்ந்த சம்யுக்தா மேனன்

அகண்டா 2 திரைப்படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-12-03 20:30 IST

சென்னை,

நந்தமுரி பாலகிருஷ்ணா - போயபதி ஸ்ரீனுவின் அகண்டா 2 திரைப்படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது. 2D மற்றும் 3D முறைகளில் திரைக்கு வர இள்ளது. 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்தின் கீழ் ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி மற்றும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இதற்கிடையில், ரிலீஸுக்கு முன்னதாக, சம்யுக்தா ஊடகங்களுடன் உரையாடினார், அவர் அதில் தனது கதாபாத்திரத்தை பற்றி பேசினார். அவர் கூறுகையில்,

‘இதில் எனது கதாபாத்திரம் மிகவும் ஸ்டைலாக இருக்கும். ஒரு காட்சியில் என் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். ஒரு பாடலில் நான் நடனமாட வேண்டும் என்று சொன்னார்கள். நான் இதற்கு முன்பு இப்படி ஒரு மாஸ் பாடலில் நடனமாடியதில்லை. இதனால் எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. பின்னர் என்னால் முடிந்ததைச் செய்ய முடிவு செய்தேன், ஆனால் என் கால்கள் ஒத்துழைக்கவில்லை. பிசியோதெரபி செய்தேன். பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும். அதுதான் ஒரு நடிகரின் இலக்கு’ என்றார்

Tags:    

மேலும் செய்திகள்