'கேங்கர்ஸ்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள 'கேங்கர்ஸ்' படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. சுமார் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார். மேலும் ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் வடிவேலு பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். குறிப்பாக பெண் வேடமிட்டும் நடித்துள்ளார். இப்படம் வருகிற 24ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், சமீபத்தில் டிரெய்லரை வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான ''குப்பன் தொல்லை தாங்கலையே' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாவது பாடலான 'என் வான்மதியே' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை லவரதன் வரிகளில் மது ஸ்ரீ மற்றும் அஷ்வத் அஜித் இணைந்து பாடியுள்ளனர்.