மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு

கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.;

Update:2025-12-13 15:28 IST

கொல்கத்தா,

உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்சி இன்று அதிகாலை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனான அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர். மெஸ்ஸி இந்தியாவில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி காணொலி வாயிலாகத் இன்று திறந்து வைத்துள்ளார்.இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில், லேக் டவுன் திடலில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது இளைய மகன் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில், அவர்கள் மூவரும் கைகுலுக்கி உரையாடியதோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருவரது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்