சமந்தா 2-வது திருமணம்..இயக்குனர் ராஜின் முன்னாள் மனைவி அதிர்ச்சி பதிவு
சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.;
சென்னை,
நட்சத்திர நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, நீண்ட காலமாக தனிமையில் இருந்த சமந்தா, தற்போது இயக்குனர் ராஜ் நிடிமோருவை மணந்துள்ளார்.
இவர்களது திருமணம் இன்று அதிகாலை கோவை ஈசா மையத்தில் உள்ள பைரவி கோவிலில் நடந்தது .இது குறித்த புகைப்படங்களை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், இயக்குனர் ராஜின் முன்னாள் மனைவி சியாமலி தே தனது இன்ஸ்டாகிராமில் ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் "நம்பிக்கை இல்லாதவர்கள் நம்பிக்கையற்ற செயல்களை செய்கிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார். சியாமலி தேவின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.