ரீ-ரிலீஸாகும் எஸ்.ஜே.சூர்யாவின் “நியூ” திரைப்படம்
‘நியூ’ திரைப்படம் 2026ம் ஆண்டு காதலர் தினத்தை ஒட்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எஸ்.ஜே.சூர்யா அறிவித்துள்ளார்.;
சென்னை,
வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அடுத்து விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். 2 படங்களும் ஹிட் என்பதால் அடுத்து இயக்கும் படங்களில் தானே ஹீரோவாக நடிப்பது என முடிவெடுத்தார். நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை தயாரித்து, இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். ஒருகட்டத்தில் வில்லன் நடிகராக மாறினார். மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். தொடர் வில்லன் வந்தாலும் அவ்வப்போது மான்ஸ்டர் போன்ற நல்ல படங்களிலும் நடித்தார். மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற படங்களின் வெற்றி எஸ்.ஜே.சூர்யாவை கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக மாற்றியது.விக்ரமின் வீர தீர சூரன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டை பெற்றது. எம்.ஆர்.ராதா போல நடிக்கிறார் என ரஜினியே பாராட்டினார். ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படமான 'கில்லர்' படத்தை இயக்கி வருகிறார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் ‘நியூ’. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இந்த படத்தினை எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், ‘நியூ’ படம் தரம் உயர்த்தப்பட்ட 4 தரத்தில் டிஜிட்டல் முறையில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது, 2026ம் ஆண்டு காதலர் தினத்தை ஒட்டி ‘நியூ’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா அறிவித்துள்ளார்.