''குட் பேட் அக்லி'' உடனான ஒப்பீடு - மனம் திறந்த ''ஓஜி'' இயக்குனர்

''ஓஜி'' திரைப்படத்தை அஜித்தின் ''குட் பேட் அக்லி'' படத்துடன் ஒப்பிட்டு பல விமர்சனங்கள் எழுந்தன.;

Update:2025-09-27 10:41 IST

சென்னை,

பவன் கல்யாண் நடிப்பில் நேற்று முன்தினம் திரைக்கு வந்த படம் 'தே கால் ஹிம் ஓஜி'. சுஜீத் இயக்கி உள்ள இந்தப் படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முன்னதாக, ''ஓஜி'' திரைப்படத்தை அஜித்தின் ''குட் பேட் அக்லி'' படத்துடன் ஒப்பிட்டு பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில், சுஜீத் இந்த ஒப்பீடுகளைப் பற்றிப் பேசினார்.

அவர் கூறுகையில், ''எனக்கு ஆதிக்கை நன்றாகத் தெரியும். ''திரிஷா இல்லனா நயன்தாரா'' உருவான காலத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். அவருக்கும் என்னையும் என் படங்களையும் மிகவும் பிடிக்கும்.

குட் பேட் அக்லி படத்திலிருந்து ஓஜி சம்பவம் என்ற தலைப்பில் ஒரு பாடல் வெளியானது. பொதுவாக, முதலில் எது வெளியாகிறதோ அது அசலாகக் கருதப்படும்.

அவர்கள் அதை வேண்டுமென்றே செய்யவில்லை, ஆனால் என் படம் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் ஆதிக் 'குட் பேட் அக்லி'யின் ஸ்கிரிப்டை எழுதத் தொடங்குவதற்கு முன்பே, நான் ஓஜி கிளிம்ப்ஸை வெளியிட்டிருந்தேன்''என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்