வெளியானது ''வார் 2'' டிரெய்லர்

இந்த படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக உள்ளது.;

Update:2025-07-25 11:13 IST

சென்னை,

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டோலிவுட் நட்சத்திரம் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஸ்பை ஆக்சன் திரில்லர் படமான வார் 2-ன் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இதில், கியாரா அத்வானி அதிரடி காட்சியில் கலக்கி இருக்கிறார். வெறும் கவர்ச்சிக்காக மட்டும் இதில் இல்லை என்பதைக் காட்டி உள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 14 அன்று தமிழ் , தெலுங்கு, இந்தியில் மிகப்பெரிய அளவில் உலகளவில் வெளியாக தயாராகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்