49 வயதில் இந்தியாவுக்கு 4 பதக்கங்களை வாங்கிக் கொடுத்த நடிகை

துருக்கியில் நடைபெற்ற ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் 2025 இல் பங்கேற்றார்.;

Update:2025-12-07 16:02 IST

சென்னை,

நடிகை பிரகதி பல வருடங்களாக படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு பிரகதி பளு தூக்குதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பளு தூக்குதலில் பல போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

தனது பளு தூக்குதல் பயணத்தை அவ்வப்போது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஏற்கனவே பல பதக்கங்களை வென்றுள்ள பிரகதி, தற்போது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்ற ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் 2025 இல் பங்கேற்று இந்தியாவுக்காக நான்கு பதக்கங்களை வென்றார்.

டெட் லிப்டில் தங்கம், பெஞ்ச் பிரஸ் & ஸ்குவாட் லிப்டிங்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் ஒட்டுமொத்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் என மொத்தமாக 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார் நடிகை பிரகதி.

இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பிரகதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம், பிரகதி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்