டைகர் ஷெராப் திரும்பி வந்தால்... ''வார் 2'' படம் குறித்து மனம் திறந்த வாணி கபூர்

நடிகை வாணி கபூர் ''வார்'' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.;

Update:2025-07-25 09:30 IST

சென்னை,

''வார்'' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வாணி கபூர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் தொடர்ச்சியான ''வார் 2'' படத்தில் இடம்பெறவில்லை.

முதல் பாகத்தில் வாணியின் கதாபாத்திரம் இறந்துவிட்டது. இருந்தபோதிலும், ரசிகர்கள் அவரது வருகையை எதிர்பார்த்தனர். இந்நிலையில், ''வார் 2'' படத்தில் தான் நடிக்கவில்லை என்று வாணி கூறினார்.

அவர் கூறுகையில், "வார் 2 சிறப்பாக உள்ளது. குறிப்பாக ஜூனியர் என்.டி.ஆரை ஹிருத்திக்குடன் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.

மேலும், "நான், சித்தார்த் ஆனந்த் மற்றும் டைகர் ஷெராப் ஆகிய மூவரும் வார் 2-ல் இல்லை. நானும் , டைகர் ஷெராபும் வார் படத்தில் இறந்துவிட்டோம். எனவே, டைகர் திரும்பி வந்தால், நானும் திரும்பி வருவேன்" என்று நகைச்சுவையாகக் கூறினார்

ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி நடித்திருக்கும் வார் 2 படம் ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்