''டான் 3'' பட வாய்ப்பை நிராகரித்த விஜய் தேவரகொண்டா?

விஜய் தேவரகொண்டா தற்போது ''கிங்டம்'' படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர உள்ளார்.;

Update:2025-07-18 19:26 IST

சென்னை,

பர்ஹான் அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள ''டான் 3'' படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடிக்க இருந்த கியாரா அத்வானிக்கு பதிலாக கிரித்தி சனோன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஷாருக்கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தேவரகொண்டா தற்போது ''கிங்டம்'' படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர உள்ளார். இப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், அவரது ரசிகர்கள் டிரெய்லருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்