''வார் 2'' டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு...ஹிருத்திக் , ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் உற்சாகம்
''வார் 2'' படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக இருக்கிறது.;
சென்னை,
பல நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வார் 2 படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர், ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி இணைந்து நடித்திருக்கும் ஆக்சன் திரைப்படம் வார் 2. அயன் முகர்ஜி இயக்கி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 14 அன்று பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.
இந்தப் படம் பிளாக்பஸ்டர் படமான வாரின் தொடர்ச்சியாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. ஜூனியர் என்.டி.ஆரின் முதல் நேரடி பாலிவுட் படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ''வார் 2'' பட டிரெய்லர் வருகிற 25-ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 2 நிமிடம் 39 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.