'வெல்கம் டு தி ஜங்கிள்' படப்பிடிப்பு நிறைவு...வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ

'வெல்கம் டு தி ஜங்கிள்' , 'வெல்கம்' படத்தின் மூன்றாவது பாகம்.;

Update:2025-12-26 16:23 IST

சென்னை,

பாலிவுட்டில் மிகவும் எதிபார்க்கப்படும் படங்களில் ஒன்றான ’வெல்கம் டு தி ஜங்கிள்’படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் , படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அறிவிக்கும் விதமாக 31 வினாடிகள் கொண்ட கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சுனில் ஷெட்டி, அர்ஷத் வார்சி, பரேஷ் ராவல், ஜானி லீவர், ராஜ்பால் யாதவ், துஷார் கபூர், ஷ்ரேயாஸ் தல்படே, க்ருஷ்ணா அபிஷேக், கிகு ஷர்தா, தலேர் மெஹந்தி, மிகா சிங், ராகுல் தேவ், முகேஷ் திவாரி, ஷரிப் ஹாஷ்மி, இனாமுல்ஹக், ஜாகிர் ஹுசைன், யஷ்பால் சர்மா, ரவீனா டாண்டன், லாரா தத்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், திஷா பதானி மற்றும் வ்ரிஹி கோட்வாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்படம் முன்னதாக 2025 கிறிஸ்துமஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர்கள் இந்த புதிய கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இப்படம் 'வெல்கம்' படத்தின் மூன்றாவது பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்