நடனக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான ஜானி மாஸ்டரின் மனைவி

இந்தத் தேர்தலில் அவர் எதிர்த்து போட்டியிட்டவரை விட 29 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.;

Update:2025-12-09 18:57 IST

ஐதராபாத்,

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா என்கிற ஆயிஷா தெலுங்கு திரைப்பட நடனக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் சுமலதா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோசப் பிரகாஷ் மாஸ்டரை விட 29 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

ஜானி மாஸ்டருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அவரை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று முன்பு கோரிய அதே நபர்கள் இப்போது அவரது மனைவியை ஆதரித்திருக்கின்றனர்.

இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு, ஜானி மாஸ்டர் காணாமல் போய்விடுவார் என்று அனைவரும் நினைத்தார்கள். இருப்பினும், அவர் எல்லாவற்றையும் கடந்து மீண்டும் பிஸியாகி, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்