நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள்

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 இந்திய படங்களை காண்போம்.;

Update:2025-09-19 16:45 IST

சென்னை,

தற்போது திரையரங்கிற்கு சென்று படம் பார்த்த காலம் போய், வீட்டிலேயே ஓடிடி மூலம் குடும்பத்துடன் மொழிகளுக்கான தடைகளை தாண்டி பிடித்த படங்களை பார்த்து மகிழ்வதோடு, அனைத்துவிதமான ஜானர் படங்களையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 இந்திய படங்களை காண்போம்.

1.ஆர்.ஆர்.ஆர்(RRR): ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய இப்படம் நெட்பிளிக்ஸில் 43.65 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Full View

2. ஜவான்( Jawaan) - ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் திரைப்படமான இது 31.90 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Full View

3. கங்குபாய் கதியாவாடி(Gangubai Kathiawadi): ஆலியா பட் நடித்த இந்தப் படம் நெட்பிளிக்ஸில் 29.64 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.

Full View

4.லாபதா லேடீஸ்(Laapataa Ladies): கிரண் ராவின் இந்தப் படம் நெட்பிளிக்ஸில் கிட்டத்தட்ட 29.50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Full View

5.அனிமல்(Animal): ரன்பீர் கபூர் நடித்த இந்தப் படம் நெட்பிளிக்ஸில் 29.20 மில்லியன் பார்வைகளை கடந்தது.

Full View

6.க்ரூ(Crew): தபு, கரீனா கபூர் கான் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்த இந்தப் படம் 27.90 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

Full View

7. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா(Maharaja) திரைப்படம் நெட்பிளிக்ஸில் 27.10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Full View

8. பைட்டர்(Fighter): ஹிருத்திக் ரோஷனின் இந்த படம் நெட்பிளிக்ஸில் 26.30 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

Full View

9. லக்கி பாஸ்கர்(Lucky Bhaskar): துல்கர் சல்மான் நடித்த இந்த படம் கிட்டத்தட்ட 26.30 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

Full View

10.ஷைத்தான்(Shaitaan): அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனின் சூப்பர்நேச்சுரல் திரில்லர் 24 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்