அருண் விஜய்யின் அதிரடி ஆக்ஷனில் "ரெட்ட தல".. ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.;
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் கடந்த மாதம் ரெட்ட தல என்ற ஆக்ஷன் அதிரடி படம் வெளியானது. கிரிஷ் திருக்குமரன் இயக்கிய இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு, டிஜோ டோமி ஒளிப்பதிவையும், ஆன்டனி எடிட்டிங்கையும் மேற்கொண்டுள்ளனர்.
அருண் விஜய் இப்படத்தில் காளி, மல்பே உபேந்திரா என்ற இரண்டு மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.