உருவாகும் ‘காட் ஆப் வார்’ வெப் தொடர்: க்ராடோஸாக ரியான் ஹர்ஸ்ட்

இந்த தொடரின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.;

Update:2026-01-17 06:36 IST

சென்னை,

பிரைம் வீடியோ மற்றும் சோனி பிக்சர்ஸ் டெலிவிஷன் இணைந்து தயாரிக்கும் பிரபல கேம் தொடரை அடிப்படையாக கொண்ட காட் ஆப் வார்(God of War) இணையத்தொடரில் க்ராடோஸ்(Kratos) கதாப்பாத்திரத்தில் ரியான் ஹர்ஸ்ட்(Ryan Hurst) நடிக்க உள்ளார்.

இது காட் ஆப் வார் கேம் தொடரை விளையாடியவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கதைக்களம் 2018 மற்றும் அதற்கு பிந்தைய நோர்ஸ் கதை (Norse era) அடிப்படையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த தொடரின் முன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் கனடாவின் வான்கூவரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்