’ஒரு பொண்ணு, ஆனா ரெண்டு பண்பாடு’...வைரலாகும் பிரியங்கா மோகன் பட பர்ஸ்ட் லுக்
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.;
சென்னை,
பவன் கல்யாணின் ஓஜி படத்தில் கடைசியாக நடித்திருந்த பிரியங்கா மோகன் தற்போது ஓடிடி உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள ஒரு படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்திற்கு மேட் இன் கொரியா எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதனை ரா.கார்த்திக் இயக்கி இருக்கிறார்.
தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. "மேட் இன் கொரியா" படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. பிரியங்கா இதற்கு முன்பு ஓடிடியில் எந்த வெப் தொடரிலோ அல்லது படத்திலோ நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.