திருக்கழுக்குன்றத்தில் 1008 பால்குட ஊர்வலம்.. வேதகிரீஸ்வரருக்கு மகா அபிஷேகம்
தாழக்கோவில் பக்தவசலேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மலைக்கோவிலை அடைந்தது.;
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது. மலை மேல் வேதகிரீஸ்வரரும், தாழக்கோவில் என அழைக்கப்படும் பெரிய கோவிலில் திரிபுரசுந்தரி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்
மலைக்கோவிலில் உள்ள வேதகிரீஸ்வரருக்கு ஒவ்வொரு ஆண்டும் மகா அபிஷேகம் நடைபெறும். 1008 பால்குடங்கள் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு 1008 பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது. பக்தர்கள் பால் குடங்களை சுமந்தபடி, பக்தி கோஷங்கள் எழுப்பியவண்ணம் ஊர்வலமாக சென்றனர்.
தாழக்கோவில் பக்தவசலேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், தாழக்கோவில் கோபுர வாசல் வழியாக வந்து சன்னதி தெரு, அடிவார வீதி வழியாக மலை அடிவாரத்தை அடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் 500-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து மலைகோவிலை அடைந்து, மூலவர் வேதகிரீஸ்வருக்கு,1008 பால்குடங்களில் உள்ள பாலால் அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.