மாட்டுப்பொங்கல் - தஞ்சை பெரிய கோயிலில் கோ பூஜை
காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தியை பக்தர்கள் வழிபட்டனர்.;
தஞ்சாவூர்,
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டது. பிரம்மாண்டமான நந்தி சிலைக்கு ஒரு டன் எடைக்கு மேல் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தியை வழிபட்டனர். இது கால்நடைகளின் பங்களிப்பை போற்றும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.