அருப்புக்கோட்டை: முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

ஐப்பசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.;

Update:2025-11-07 11:09 IST

அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் பழனியாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல பஜாரில் உள்ள வாலசுப்பிரமணியர் கோவில், பாளையம்பட்டி சுப்பிரமணியர் கோவில் மற்றும் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் உள்ள உற்சவர் முருகப்பெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா நகரில் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல் துலுக்கன்குறிச்சி வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் குழந்தை வரம் வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும், சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. விஜயகரிசல்குளம் வழிவிடு பாலமுருகன் கோவில், இ.எல்.ரெட்டியபட்டி முருகன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்