கார்த்திகை 4-வது சோமவாரம்: வாலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

பூஜையைத் தொடர்ந்து சங்குகளில் இருந்த புனித நீரை கொண்டு மூலவர் வாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2025-12-08 17:24 IST

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 4-வது சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு அவற்றை நெல்லின் மீது அலங்கரித்து வைத்து சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். பின்னர் சிவமூல மந்திர ஹோமமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜையைத் தொடர்ந்து சங்குகளில் இருந்த புனித நீரை கொண்டு மூலவர் வாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 15-ந்தேதி கார்த்திகை ஐந்தாவது சோம வாரத்தை முன்னிட்டு மதியம் 2 மணியளவில் 1,008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்