ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை, லட்ச குங்குமார்ச்சனை

லட்சார்ச்சனையை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம், பூஜை செய்யப்பட்டது.;

Update:2025-11-10 10:55 IST

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தெலுங்கு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் லட்ச வில்வார்ச்சனை, லட்ச குங்குமார்ச்சனை நடப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான லட்ச வில்வார்ச்சனை, லட்ச குங்குமார்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் தொடங்கின. முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம், பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சிவனுக்கு லட்ச வில்வார்ச்சனை, ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனை செய்யப்பட்டது.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத், துணை செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜை வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்