மார்கழி உற்சவங்கள்.. நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பில் மாற்றம்

மார்கழி மாதத்தையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்படும்.
மார்கழி உற்சவங்கள்.. நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பில் மாற்றம்
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நாளை( 16-ந் தேதி) தொடங்கி, ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் அதிகாலையில் பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல் திருஞானபால் வழங்கப்படவுள்ளது.

மேலும் மார்கழி மாதத்தையொட்டி கோவில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலையில் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு, உச்சிக்கால பூஜை முடிந்து நண்பகல் 12 மணிக்கு நடைசாத்தப்படும். பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பல்லக்கு புறப்பாடாகி, பூஜை ஆரம்பமாகி இரவு 9.30 மணிக்குள் பூஜைகள் முடிந்தவுடன் கோவில் நடைசாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் கூடலழகர் பெருமாள் கோவில் மார்கழி மாதத்தையொட்டி நாளை (16-ந் தேதி) முதல் ஜனவரி 15-ந் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். மேலும் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியை தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு சாத்தப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com