கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பசுக்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.;

Update:2026-01-16 13:44 IST

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் விவேகானந்த கேந்திர நிர்வாகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோசாலையில் உள்ள 50 பசு மாடுகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டு, கொம்பில் பட்டு துணியினால் பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

மண் பானைகளில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மஞ்சள் பொங்கல் வைக்கப்பட்டது. அதன்பிறகு கோசாலையின் மத்தியில் எழுந்தருளியிருக்கும் கோமாதாவுடன் கூடிய கிருஷ்ணர் சிலை முன்பு பொங்கல், காய் கனிகள் மற்றும் பழவகைகள் படைக்கப்பட்டு, பசு மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பசு மாடுகளுக்கு காய்கறிகள், கீரைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதமாக சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் மஞ்சள் பொங்கல் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்