பழனி வீர துர்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.;
பழனி வடக்கு கிரிவீதியில் வீரதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவில் உபகோவிலான இங்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவு அடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் நேற்று தொடங்கின. நேற்று விநாயகர் பூஜை, கலச பூஜை செய்து முதற்கால யாக பூஜை நடைபெற்றது.
இன்று காலை 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்பு புனிதநீர் வைக்கப்பட்ட கலசம் கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்டது. பின்பு கோவில் விமானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள், இணை ஆணையர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.