உலக நன்மை வேண்டி தோரணமலையில் சிறப்பு வழிபாடு.. நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்பு

தோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.;

Update:2025-11-09 15:45 IST

தென்காசி மாவட்டம், கடையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்பட்ட ஸ்தலம் ஆகும். இந்த ஆலயத்தில் மாதந்தோறும் பெளர்ணமி தினத்தில் நடைபெறும் கிரிவலம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று முருகப்பெருமானை வழிபடுகின்றனர். இதேபோல் உலக நன்மை வேண்டி இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் ஈசனாக போற்றப்படும் அரச மரத்திற்கும், பார்வதியாக போற்றப்படும் வேப்ப மரத்திற்கும் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சப்த கன்னியர் பூஜை, இயற்கையாக உருவான தீர்த்த சுனைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் 27 நட்சத்திரங்களுக்கான மரங்களுக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது.

உலக நன்மை வேண்டி நடத்தப்பட்ட இந்த சிறப்பு வழிபாடுகளில் நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் காலை மற்றும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்