திருப்பூர்: சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2025-12-15 15:09 IST

சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர்

திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை ஊராட்சி சாமிநாதபுரம் கிராமத்தில் சித்தி விநாயகர், ஐந்தாம் பிள்ளையார், கன்னிமார், கருப்பண்ணசாமி கோவில் புதிதாக புனரமைப்பு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 12-ந் தேதி மங்கள இசையுடன் தொடங்கப்பட்டது.

பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று முன் தினம் கணபதி ஹோமம், கோ பூஜை செய்யப்பட்டு முதற்கால யாக பூஜை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு காலை 5.30 மணிக்கு சித்தி விநாயகர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.

விழா நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்