ராஜஸ்தானில் லாரி மோதி 12 பேர் உயிரிழப்பு

Update:2025-11-03 15:46 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள ஹர்மதா என்ற இடத்தில் சரக்கு லாரி ஒன்று அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாக ஜெய்ப்பூர் மாவட்ட கல்கெடர் ஜிதேந்திர சோனி கூறியுள்ளார். சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் 15 பக்தர்கள் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்து குறித்து ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தானில் கடந்த 2 நாட்களில் நடந்த இரண்டாவது பெரிய சாலை விபத்து இதுவாகும். ராஜஸ்தானின் பலோடியில் நேற்று மாலை பயணிகள் வேன் ஒன்று ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேன், பாரத் மாலா நெடுஞ்சாலையில் உள்ள மடோடா கிராமத்திற்கு அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் 2 பேர் பேர் காயமடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்