அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

கடந்த சில நாட்களாக சரிவுடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை இன்று (26.11.2025 - புதன்கிழமை) அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, 320 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 26 ஆயிரத்து 205 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 707 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 528 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 390 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 799 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 22 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 609 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

202 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 9 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 772 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 790 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com