ஐஐடிடிஎம் கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள்.. வேலை வாய்ப்புகள் எப்படி?
1992ஆம் ஆண்டு குவாலியரிலும் (Gwalior), 1996ஆம்ஆண்டு புவனேஸ்வரிலும் (Bhubaneswar), 2004 ஆம்ஆண்டு கோவாவிலும், 2007ஆம் ஆண்டு நொய்டாவிலும், 2008ஆம் ஆண்டு நெல்லூரிலும் இந்த மையங்கள் தொடங்கப்பட்டன.;
சென்னை,
மத்திய அரசின் சுற்றுலா துறையின்கீழ் உருவாக்கப்பட்டு தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக விளங்குவது “இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டூரிஸம் அன்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்”(Indian Institute of Tourism and Travel Management) ஆகும். இந்தியாவில் சுற்றுலா கல்வியை கற்பிக்கும் மிகச்சிறந்த கல்வி நிறுவனமாக இந்த நிறுவனம் விளங்குகிறது.
சுற்றுலா தொடர்பான துறைகளான சுற்றுலா (Tourism)> பயணம் (Travel) மற்றும் அதனைச் சார்ந்த மற்ற துறைகளிலும் போதிய கல்வி (Education)> பயிற்சி (Training)> ஆராய்ச்சி (Research) மற்றும் ஆலோசனைகளை (Consultancy) வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனம் விளங்குகிறது.
1983ஆம் ஆண்டு இந்த “இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டூரிஸம் அன்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்” நிறுவனம் குவாலியர் என்னும் இடத்தில் தொடங்கப்பட்து. பின்னர், 5 மையங்களும் (Centres)> 2 முகாம் அலுவலகங்களும் (Camp Offices) சில இடங்களில் தொடங்கப்பட்டன.
1992ஆம் ஆண்டு குவாலியரிலும் (Gwalior), 1996ஆம்ஆண்டு புவனேஸ்வரிலும் (Bhubaneswar), 2004 ஆம்ஆண்டு கோவாவிலும், 2007ஆம் ஆண்டு நொய்டாவிலும், 2008ஆம் ஆண்டு நெல்லூரிலும் இந்த மையங்கள் தொடங்கப்பட்டன.
2018ஆம் ஆண்டு போத்கயா (Bodh Gaya) மற்றும் ஷpல்லாங் ஆகிய இடங்களில் முகாம் அலுவலகங்கள் (Camp Offices) தொடங்கப்பட்டன.
இந்த நிறுவனம் 4 வகையான கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது. அவை -
1.கல்வி பணிகள் (ACADEMICS)
2.திறன் மேம்பாட்டு திட்டங்கள் (CAPACITY BUILDING PROGRAMMES)
3.ஆராய்ச்சிகள் மற்றும் ஆலோசனைகள் (RESEARCH AND CONSULTANCY)
4.பயிற்சிகள் மற்றும் வளர்ச்சிகள் (TRAINING AND DEVELOPMENT)
-ஆகியவை ஆகும்.
இந்த நிறுவனம் பட்டம் (Degree Courses) மற்றும் பட்ட மேற்படிப்புகளை (Post Graduate Courses) நடத்துகிறது.
பட்டப்படிப்பாக - பேச்சுலர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் (டிராவல் அன்ட் டூரிஸம்) (Bachelor of Business Administration) (Travel and Tourism)> பட்ட மேற்படிப்பாக, மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் (டிராவல் அன்ட் டூரிஸம் மேனேஜ்மெண்ட்) (Master of Business Administration) (Travel and Tourism Management) ஆகிய படிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன.
1.பேச்சுலர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் (டிராவல் அன்ட் டூரிஸம்)
(BACHELOR OF BUSINESS ADMINISTRATION) (TRAVEL AND TOURISM)
இந்தப்படிப்பு 3 ஆண்டுகள் நடத்தப்படுகிறது.
பேச்சுலர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் (டிராவல் அன்ட் டூரிஸம்) (Bachelor of Business Administration) (Travel and Tourism) என்னும் படிப்பில் வெளிநாட்டு மொழிகள் (Foreign Languages) கற்றுத் தரப்படுகின்றன. இவைதவிர, சுற்றுலா சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், பயணச்சீட்டு மற்றும் நுழைவுச்சீட்டு வழங்குதல் (Ticketing)> சாகசங்களை புரிதல் (Adventure) ஆகியவற்றில் போதிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்தப்படிப்பில், ஆளுமை வளர்ச்சிக்குத் தேவையான (Personality Development) அனுபவ அறிவு பெற சிறந்த பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பணியிடைப்பயிற்சி (Internship)> வேலை வழங்குதல் (Placement) மற்றும் களப் பயணம் மற்றும் ஆய்வு (Field Visit) மற்றும் கல்வி சுற்றுலா (Study Tours) ஆகியவற்றின்மூலமும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தொழிற்சாலை வல்லுநர்களை (Industry Experts) அழைத்து, அவர்களோடு கலந்துரையாடவும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுகிறது.
இந்தப்படிப்பு மூன்று ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
இருப்பினும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிளஸ் 2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
பிளஸ் 2 படிப்பில் எந்தப் பாடத்தையும் விருப்பப் பாடமாக எடுத்து படித்தவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம்.
மேலும், இந்தப் படிப்பில் சேர, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிசம் அன்டு டிராவல் மேனேஜ்மென்ட் (INDIAN INSTITUTE OF TOURISM AND TRAVEL MANAGEMENT) (IITTM) நடத்தும் நுழைவுத் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும்..
இந்தப்படிப்பில், சேர அதிகபட்ச வயது வரம்பு 22 ஆகும். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 5 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது, இவர்கள் 27 வயது வரை இந்தப் படிப்பில் சேரலாம்.
2.மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் (டிராவல் அன்ட் டூரிஸம் மேனேஜ்மெண்ட்) (MASTER OF BUSINESS ADMINISTRATION) (TRAVEL AND TOURISM MANAGEMENT)
இந்தப்படிப்பு 2 வருடப் படிப்பு ஆகும்.
மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் (டிராவல் அன்ட் டூரிஸம் மேனேஜ்மெண்ட்) (Master of Business Administration) (Travel and Tourism Management) என்னும் படிப்பில் மேலாண்மை திறன்களை வளர்ப்பதற்கான அடிப்படை கல்வியைக் கற்றுக்கொள்வதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இது இரண்டு வருட படிப்பாகும்.
இந்தப் படிப்பில் பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்து படித்து வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம்.பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும். மேலும், இந்தப்படிப்பில் சேர, “இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிசம் அன்டு டிராவல் மேனேஜ்மென்ட்” (INDIAN INSTITUTE OF TOURISM AND TRAVEL MANAGEMENT) (IITTM) நடத்தும் நுழைவு தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும். அல்லது “காமன் யூனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட்” (COMMON UNIVERSITY ENTRANCE TEST) (CUET) என்னும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இவைகள் தவிர, “காமன் அட்மிஷன் டெஸ்ட்” (COMMON ADMISSION TEST) (CAT) அல்லது “மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்” (MAMAGEMENT APTITUDE TEST) (MAT) ஆகிய ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்தப் படிப்பில் சேர தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். மேலும், குழு விவாதம் (GROUP DISCUSSION) மற்றும் நேர்முகத் தேர்வு (PERSONAL INTERVIEW) ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தப் டிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 22 ஆகும். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 5 வருடங்கள் வயதுவரம்பில் தளர்வு உண்டு. அதாவது, இவர்கள் 27 வயது வரை இந்தப் படிப்பில் சேரலாம்.
வேலை வாய்ப்புகள்.
இந்தப் படிப்புகளை படித்து வெற்றி பெற்றவர்களுக்கு ஏராளமான நிறுவனங்கள் வேலை வழங்க காத்திருக்கின்றன.
குறிப்பாக, MAKE MY TRIP, IRCTC, ITPL, SOTC, HUNGRYBAGS, TIME, ATTITUDE, RAMOJI, YATRA, PRAXIX, INDIA HIKES, KERA HOLIDAY MART, RAPID TRAVELS, EARTH WATER GROUP, PICKYOURTRAIL, RADISSON HOTELS, KUONI GLOBAL TRAVEL SERVICES, YHA INDIA, OM LOGISTICS LTD, DEE CATALYST, FCM TRAVEL SOLUTIONS போன்ற பல நிறுவனங்கள் உடனடி வேலைவாய்ப்புகளை, திறமை உள்ளவர்களுக்கு வழங்குகின்றன.
மேலும், VIA.COM, ரெட் CARPET, GOIBIBO, TUI GROUP, GE ANIS HOLIDAY INDIA, TRAVEL GURU, TIGER PAW, LA VOCONZA TRAVEL, NEUMECH EVENTS, PARIS HOLIDAYS, TAJ HOTEL RESORTS AND PARADISE, HERITAGE AVIATION, OBEROI, BANYAN TREE, HOLIDAY INDIA -ஆகிய நிறுவனங்களிலும் இந்த பி.பி.ஏ அல்லது எம்.பி.ஏ படிப்பை முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு…
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி…
IITTM GWALIOR (HEAD QUARTER)
INDIAN INSTITUTE OF TOURISM AND TRAVEL MANAGEMENT
GOVINDPURI,
GWALIOR 474 011(M.P.)
Tel: 9425407607, 7898927820, 9425111266, 7987146651
Email: admissions@iittm.ac.in
Website: www.iittm.ac.in
IITTM BHUBANESWAR CENTRE
DUMDUMA,
BHUBANSWAR 751 019 (ODISHA)
Tel: 9437010180, 8342082073
Email: admissioniittmb@gmail.com
Website: www.iittmb.இந்த
***************
IITTM NELLORE CENTRE
NATIONAL INSTITUTE OF WATER SPORTS,
AIVAVO,
NEAR DONA PAULA CIRCLE,
CARANZALEM,
PANAJIM 403 004(GOA)
Tel: 9447791508, 7377686582
Email: goa@iittm.ac.in
Website: www.niws.nic.in
********************
IITTM NOIDA CENTRE
PLOT NO. A 36,
SECTOR-62,
NOIDA - 201309(U.P.)
Tel: 7503465065, 8447380619
Email: admissions@iittmnoida.ac.in
Website: www.iittmnoida.ac.in
IITTM GOA CENTRE
GOLAGAMUDI,
NELLORE - 524821 (ANDHRA PRADESH)
Tel: 9490787854, 8778158261
Email: nellore@iittm.ac.in
Website: www.iittmsouth.org