இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.;

Update:2025-11-07 08:46 IST

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ( NHAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்: அக்கவுன்டன்ட் 42, ஸ்டெனோகிராபர் 31, உதவி மேனேஜர் 9, நுாலக உதவியாளர் 1, ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் 1 என மொத்தம் 84 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: சி.ஏ., / சி.எம்.ஏ., / எம்.பி.ஏ., / பட்டப்படிப்பு.

வயது: 15.12.2025 தேதியிட்டு வரயதுவரம்பு கணக்கிடப்படும். 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிப்பது எப்படி: nhai.gov.in என்ற இணையதளம் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

சம்பளம்: ரூ. 25,500 முதல் 1,77,500 வரை

விண்ணப்பிக்க கடைசிநாள்: 15.12.2025

Tags:    

மேலும் செய்திகள்