டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.32 ஆயிரம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.;
நபார்டு வங்கி
NABARD Development Assistant Recruitment 2026: “வங்கி வேலை தான் என் கனவு.. அதுவும் மத்திய அரசு வங்கியில் வேலை கிடைத்தால் சும்மாவா?” என்று காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் காண்போம்.
இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்கான மிக முக்கிய வங்கியான தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை இங்கே விரிவாகக் காண்போம் வாருங்கள்.
பணியிட விவரங்கள்:
நபார்டு வங்கியானது (NABARD) இந்தியா முழுவதும் உள்ள அதன் கிளைகளில் காலியாக உள்ள “Development Assistant” பணியிடங்களை நிரப்ப உள்ளது.
பணி: Development Assistant.
மொத்த காலியிடங்கள்: 162.
பணியின் தன்மை: இது ஒரு நிரந்தர மத்திய அரசு வேலையாகும்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு: இந்த வேலைக்கு விண்ணப்பிக்கப் பெரிய தொழில்நுட்பப் கல்வி அறிவு எதுவும் தேவையில்லை.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Any Degree) முடித்திருந்தாலே போதும். (B.A, B.Sc, B.Com, B.E என யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்).
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு? (Salary)
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்குத் தொடக்க நிலையிலேயே மிகச் சிறந்த சம்பளம் வழங்கப்படுகிறது. மாதம் ரூ.32,000 வரை சம்பளம் கிடைக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, வங்கி ஊழியர்களுக்கான இதர படிகள் மற்றும் சலுகைகளும் கிடைக்கும்.
தேர்வு முறை (Selection Process)
தகுதியான பணியாளர்கள் மூன்று கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்:
முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam): ஆன்லைன் வழியிலான அடிப்படைத் தேர்வு.
முதன்மைத் தேர்வு (Main Exam): ஆன்லைன் வழியிலான விரிவான தேர்வு.
மொழித் திறன் தேர்வு (Language Proficiency Test): நீங்கள் எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி (எ.கா: தமிழ்) எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கிறதா எனச் சோதிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
எஸ்சி (SC), எஸ்டி (ST), முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ.50/- மட்டுமே.
மற்ற பிரிவினருக்கு (General/OBC/EWS): ரூ.450/-.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
www.nabard.org என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
அதில் “Career” பகுதியில் உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்யவும் (ஜனவரி 17 முதல் செயல்படும்).
தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கவும்.
முக்கிய தேதிகள் (Important Dates)
விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 17.01.2026 (நாளை).
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 03.02.2026.