சென்னையில் உள்ள கோவிலில் வேலை வாய்ப்பு: ரூ.48 ஆயிரம் சம்பளம்- உடனே விண்ணப்பிங்க

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.;

Update:2026-01-22 09:24 IST

சென்னை,

சென்னை பூங்கா நகரில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 08 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்; அலுவலக உதவியாளர், இரவு காவலர், தோட்ட பராமரிப்பாளர், ஓதுவார், சுயம்பாகி, கால்நடை பராமரிப்பாளர், ஸ்ரீபாதம் தாங்கி, சரக்கரை காப்பாளர்- என மொத்தம் 08 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி 18-வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு: அதிகபட்சமாக ரூ.13,200- 41,800 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதியுள்ளவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர்,சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், எண் 315, தங்கசாலை தெரு, சென்னை -600003.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

Tags:    

மேலும் செய்திகள்