தபால் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் தேர்வு; சென்னையில் நாளை நடக்கிறது

தபால் துறை சார்பில் வட்ட அளவிலான குறைதீர்க்கும் முகாம் நடக்க இருக்கிறது.;

Update:2025-11-06 15:23 IST

சென்னை,

மத்திய அரசு தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீடு திட்டங்களின் முகவர்களாக சேர்பவர்களுக்கான நேர்காணல், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னை பொது தபால் முதன்மை அதிகாரி அலுவலகத்தில் நடக்கிறது. 18 வயது நிரம்பியதுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் வரவேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் பாதுகாப்பு தொகையாக ரூ.5 ஆயிரமும், உரிமைக் கட்டணமாக ரூ.250-ம் செலுத்த வேண்டும். பாலிசிகளுக்கு ஏற்ப கமிஷன் வழங்கப்படும். தபால் துறை சார்பில் வட்ட அளவிலான குறைதீர்க்கும் முகாம் நடக்க இருக்கிறது. ஏ.சுந்தரேஸ்வரி, உதவி இயக்குனர், முதன்மை தபால் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-2. என்ற முகவரிக்கு வருகிற 17-ந் தேதிக்கு முன்பாக கருத்துகளை எழுதி அனுப்ப வேண்டும் என்று தபால் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்