தமிழக அரசு வேலை..60 காலிப்பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மொத்தம் 60 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2026-01-05 07:07 IST

சென்னை,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னையில் உள்ளது. காஞ்சிபுரம், சிவகங்கை, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் நிர்வாக ரீதியிலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

காலி பணி இடங்கள்: 60

பதவி: உதவியாளர், சுருக்கெழுத்தர் தரம்-III, ஓட்டுநர், பண்ணை மேலாளர், திட்ட உதவியாளர் உள்பட பல்வேறு பணியிடங்கள். பணி அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு

வயது: 30-11-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு உண்டு.

சம்பளம்: ரு.56,100-1,77,500- (அதிகபட்சமாக)

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-1-2026

எப்படி விண்ணபிக்க வேண்டும்? தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

“The Director of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Skill Development Centre Building, Madhavaram Milk Colony, Chennai, Pincode – 600 051, Tamilnadu” என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி: https://tanuvas.ac.in/kvk_recruitment.php

Tags:    

மேலும் செய்திகள்