தமிழக அரசு வேலை: 999 காலியிடங்கள்- நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.;
image credit: Ai
சென்னை,
தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் காலியாக உள்ள நர்சிங் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 999 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள் : 999 நர்சிங் உதவியாளர் பணியிடங்கள்
கல்வித்தகுதி : விண்ணப்பதார்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றி இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் கட்டாயமாகும். மேலும், அரசு மருத்துவ கல்லூரியில் நர்சிங் உதவியாளர் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு? : நர்சிங் உதவியாளர் கிரேடு II பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,700 முதல் 58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்களின் மதிப்பெண்கள், தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். அதாவது விண்ணப்பதார்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 40 சதவீதம் மற்றும் நர்சிங் உதவியாளர் பயிற்சி சான்றிதழில் இருந்து 60 சதவீதம் என்ற அடிப்படையில் 100 சதவீதத்திற்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.02.2026
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படுகிறது.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://mrb.tn.gov.in/departments_cms/uploads/tami_800/content_pdf/NotificationforthepostofNursingAssistantGradeII.pdf