இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள் என்னென்ன?
மத்திய மற்றும் மாநில அரசுகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணி பரியும் அதிகாரிகளுக்காக மக்கள் தொடர்பு மற்றும் பல்வேறு ஊடக பயிற்சிகளை இந்த நிறுவனம் வழங்கியது.;
1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி “இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்” (INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION) நிறுவனம் தொடங்கப்பட்டது.மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தொடக்க காலத்தில் மத்திய தகவல் தொடர்பு அதிகாரிகள் பயிற்சி பெறும் வகையில் சில முக்கிய பயிற்சிகளை வழங்கியது. பின்னர் சில ஒலிபரப்புத் துறையில் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.
1969 ஆம் ஆண்டு "போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ கோர்ஸ் இன் ஜர்னலிசம் ஃபார் டெவலப்பிங் கண்ட்ரிஸ் “(POST GRADUATE DIPLOMA COURSE IN JOURNALISM FOR DEVELOPING COUNTRIES) என்னும் உலக அளவில் இதழியல் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை தொடங்கி நடத்தியது . இந்த பயிற்சி “அப்ரோ _ ஏசியன் “ (AFRO-ASIAN) நாடுகளில் பணி புரியும் இதழாளர்களுக்காக (WORKING JOURNALISTS) நடத்தப்பட்டது. ஒரு வாரம் முதல் மூன்று மாதங்கள் வரை சில பயிற்சிகள் நடத்தப்பட்டன.பின்னர், மத்திய மற்றும் மாநில அரசுகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணி பரியும் அதிகாரிகளுக்காக மக்கள் தொடர்பு மற்றும் பல்வேறு ஊடக பயிற்சிகளை இந்த நிறுவனம் வழங்கியது.
பின்னர் முழு நேர "போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்பு"களை (POST GRADUATE DIPLOMA COURSES) நடத்த தொடங்கியது. தற்போது பல்வேறு சிறப்பு படிப்புகளையும் பயிற்சிகளையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.ஊடகத்துறை மற்றும் தகவல் தொடர்பு துறை நிறுவனங்களில் பணி பரியும் பணியாளர்களின் தகுதிகளையும், சிறப்பு திறமைகளையும் வளர்த்துக் கொள்ளும் விதத்தில் பல்வேறு படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.1993 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கானல் (DHENKANAL ) என்னும் இடத்தில் முதன் முதலாக கிழக்கு மண்டல தேவைகளின் அடிப்படையில் மண்டல அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது.
2011- 2012 கல்வி ஆண்டில் வடகிழக்கு மண்டலத்தில் இரண்டு மண்டல மையங்கள் (REGIONAL CENTRES)தொடங்கப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதி (AMARAVATI)என்னும் இடத்திலும், மிசோரம் மாநிலத்தில் ஐசவல் (AIZAWL) என்னும் இடத்திலும் இந்த மண்டல மையங்கள் உருவாக்கப்பட்டன.
2012 -2013 ஆம் கல்வி ஆண்டில், கிழக்கு மண்டல தேவைகளை பூர்த்தி செய்ய ஜம்மு (JAMMU)என்ற இடத்திலும் ,தெற்கு மண்டல மக்களின் தேவைக்காக கேரளாவில் கோட்டயம் (KOTTAYAM) என்ற இடத்திலும் மண்டல மையங்கள் உருவாக்கப்பட்டன.
பலவித படிப்புகள்.
இங்கு நடத்தப்படும் பல்வேறு பட்ட மேற்படிப்புகள் (POST GRADUATE DEGREE PROGRAMMES) மற்றும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்புகள் (POST GRADUATE DIPLOMA PROGRAMMES) பற்றிய விவரங்கள்.
I.பட்ட மேற்படிப்புகள்
(POST GRADUATE DEGREE PROGRAMMES)
1 MA IN MEDIA BUSINESS STUDIES
(IIMC, NEW DELHI)
2 MA IN STRATEGIC COMMUNICATION
(IIMC, NEW DELHI)
3.MA IN NEW MEDIA COMMUNICATIONS
(IIMC, NEW DELHI, IIMC, AIZAWL, IIMC JAMMU ,IIMC, KOTTAYAM)
II.போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்புகள்
(POST GRADUATE DIPLOMA PROGRAMMES)
(ONE-YEAR POST GRADUATE DIPLOMA PROGRAMMES)
(AT IIMC, NEW DELHI, AND ITS REGIONAL CAMPUSES).
1 PG DIPLOMA IN JOURNALISM (ENGLISH)
(IIMC, NEW DELHI , IIMC,DHENKANAL, IIMC, AIZAWL , IIMC, AMRAVATI, IIMC, KOTTAYAM, IIMC JAMMU)
2 PG DIPLOMA IN JOURNALISM (HINDI)
(IIMC, NEW DELHI, IIMC, JAMMU , IIMC, AMRAVATI)
3.PG DIPLOMA IN RADIO & TV JOURNALISM
(BILINGUAL – ENGLISH & HINDI)
(IIMC, NEW DELHI)
4 PG DIPLOMA IN ADVERTISING & PUBLIC RELATIONS (BILINGUAL – ENGLISH & HINDI)
(IIMC, NEW DELHI)
5 PG DIPLOMA IN CORPORATE COMMUNICATION AND BRAND MANAGEMENT=
(IIMC, DHENKANAL)
6 .PG DIPLOMA IN JOURNALISM (ODIA)
(IIMC, DHENKANAL)
7.PG DIPLOMA IN JOURNALISM (MARATHI)
(IIMC, AMRAVATI)
8.PG DIPLOMA IN JOURNALISM (MALAYALAM)
(IIMC, KOTTAYAM)
9 .PG DIPLOMA IN JOURNALISM (URDU)
(IIMC, NEW DELHI)
கல்வித் தகுதிகள்
1.எம். ஏ படிப்புகள்.
எம்.ஏ படிப்புகளில் சேர பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். எந்தப் பாடம் எடுத்து படித்திருந்தாலும் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
2.பி .ஜி. டிப்ளமோ ப்ரோக்ராம்ஸ்.
பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றவர்கள் இந்த படிப்புகளில் சேர்ந்து படிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள். இருப்பினும் பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்களும் இந்த படிப்பில் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள். ஆனால், இந்த கல்வி நிறுவனம் நிர்ணயித்த இறுதி நாட்களுக்குள் பட்டப்படிப்பு படிப்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
வயதுவரம்பு
1. எம். ஏ படிப்புகள்.
இந்தப் படிப்புகளில் சேர வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எந்த வயதிலும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
2. பி .ஜி. டிப்ளமோ படிப்புகள்.
இந்தப் படிப்புகளில் சேர அதிகபட்ச வயது 25 ஆகும். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் களுக்கும் ,மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பில் தளர்வு உண்டு. இவர்கள் 30 வயது வரை இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.இதர பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் 28 வயது வரை இந்த தேர்வினைஎழுதலாம்.
இட ஒதுக்கீடு.
இங்கு நடத்தப்படும் எல்லா படிப்புகளுக்கும் இட ஒதுக்கீடு (RESERVATION) வழங்கப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும், பழங்குடி இனத்தவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. மேலும் இதர பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (ECONOMICALLY WEAKER SECTIONS) 10 சதவீத இட ஒதுக்கீடு உண்டு.
மாணவர் சேர்க்கை.
பொதுவாக, இங்கு நடத்தப்படும் படிப்புகளில் சேர கண்டிப்பாக "காமன் யூனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட்"(COMMON UNIVERSITY ENTRANCE TEST) (CUET-PG) என்னும் தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். இந்த தேர்வில் வெற்றி சிறப்பான வெற்றி பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதன் பின்னரே மாணவர் சேர்க்க நடைபெறும்.
இருப்பினும் ஒடியா,(ODIA), மராத்தி (MARATHI ), மலையாளம் (MALAYALAM),உருது (உருது) போன்ற மொழிகளில்" பி ஜி டிப்ளமோ" (P.G.. DIPLOMA COURSES) படிப்பவர்கள்" இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்" (INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION) நடத்தும் நுழைவு தேர்வு எழுதினால் போதும். இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி: www.iimc.gov.in ஆகும்.
மேலும் விவரங்களுக்கு..
இங்கு நடத்தப்படும் பல்வேறு படிப்புகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION (IIMC) NEW DELHI
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION
ARUNA ASAF ALI ROAD, NEW DELHI - 110067
TEL: +91-11-26741352
FAX: +91-11-26742462
EMAIL: academiciimc1965@gmail.com
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION (IIMC) DHENKANAL
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION
P B NO 21, SANCHAR MARG,
DHENKANAL, ODISHA- 759001
TEL: +91-6762-226194, 226196
FAX: +91-6762-226195
MOBILE: 9337709000
EMAIL: iimcdkl@yahoo.co.in
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION (IIMC), KOTTAYAM
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION
SOUTHERN REGIONAL CAMPUS
8TH MILE, VELLOOR, KK ROAD, PAMPADY,
KOTTAYAM, KERALA– 686501
+91-481-2502520 MOB: +91 9496989923,
+91 8547482443
EMAIL: IIMCKOTTAYAM2012@GMAIL.COM
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION (IIMC), AIZAWL
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION
MIZORAM UNIVERSITY CAMPUS,
TANHRIL, AIZAWL, MIZORAM - 796004
TEL: +91-389-2300871, 2322813
EMAIL: iimcnercampus@gmail.com
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION (IIMC), AMRAVATI
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION
DR. SHRIKANT JICHKAR MEMORIAL CENTRE
SANT GADGE BABA AMRAVATI UNIVERSITY, AMRAVATI, MAHARASHTRA - 444602
TEL: 0721-2668180
EMAIL: iimcamt.entrance@gmail.com
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION (IIMC) JAMMU
INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION
NORTHERN REGIONAL CENTRE
VILLAGE PATTIAN
BSNL EXCHANGE ROAD,
BANTALAB, JAMMU - 181123
PHONE NUMBER:9419750600 EMAIL: jammuiimc@gmail.com.