அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் ராபின்சன் நகரின் மெக்ஸ்டன் பகுதியில் நேற்று இரவு கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, அந்த நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர் யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com